சலாவு 55 கவிதைகள்
உயிருக்கு மெய் உடல் .!.
என்பதாலா என் .!.
உறவுக்கு நீ பொய்யானாய் .!.
.
நிஜத்திற்கு மெய் நிறம் .!.
என்பதாலா என் .!.
நிழலிற்கு நீ பொய்யானாய் .!.
.
கனவிற்கு மெய் கண் .!.
என்பதாலா என் .!.
காட்ச்சிக்கு நீ பொய்யானாய் .!.
.
பகல் வேஷத்திற்கு மெய் அன்பு .!.
என்பதாலா என் .!.
பாசத்திற்கு நீ பொய்யானாய் .!.
.
அன்பே, அமுதே, ஆருயிரே .!.
.
கவிதைக்கு பொய் அழகு .!.
என்பதாலா என் .!.
காதலுக்கே நீயும் பொய்யானாய் .!.
..........
...................சலா,