ஆன் திஸ் டே

100 அடி சாலையில்
எக் ரைஸ் மணம் கமழ
ஆவி பறக்கும் கானலில்
சில்லிச் சாஸ்க்கான உன் காத்திருப்பில்
ஒரு முறைதான் பார்த்தாய்.
ஆப்பாயில் மறந்துக் கை கழுவிய பின்
மாஸ்டரோட "என்னடே.... தப்பி.."க்கு
முழித்துக் கொள்ளும் போது
நீ இன்னோரு முறை பார்த்தாய் !
புகை கக்கும் அப்பெருஞ்சாலையில்
எப்படியெல்லாமோ
உன் பார்வை மொய்த்து
நெளிந்து
நான் சுவாசித்து நீர்த்துப்போனப் பின்
இட்ட பதிவொன்று
ஆன் திஸ் டே" வை
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது ...

- முருகன்.சுந்தரபாண்டியன்

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (31-Mar-16, 3:29 pm)
Tanglish : aan this te
பார்வை : 72

மேலே