பறவை எனும் வதுவை-சுஜய் ரகு

இளம் மூங்கில் காட்டில்
பறவையாகி பேரிரைச்சலிட்டிருந்தாள்
அவள்
இரைச்சல் எனும் அவள் கனவுகள்
கடந்து போகும் புழுதியினூடே
கலந்து
நரை கொண்ட எருக்க மலர்கள்
சூழ்
பொட்டலில்
வதுவையாகி நின்று விம்மியது
விம்மல்
வெடித்துக் கண்ணீர் பெருகியும்
பேரசட்டை
வறண்ட
முன்னாள் நன்னிலத்தாரில்
அவளான அப்பறவைக்கு
இன்று
வேர்கள் கொழுத்த
மரக்கிளையின் கூடொன்றில்
வாழ்வமைந்தபோதும்
வானளக்கும் கனவுகள் தானில்லை
தொய்வோடிக்
கிடக்குமதன் கண்களில்..!

எழுதியவர் : சுஜய் ரகு (1-Apr-16, 10:46 am)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 100

மேலே