வேறு நிலாக்கள் 36 எழுத்து கவிஞர்கள்

முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்


அலமாரி ஏறி
புல்லாங்குழல் வருடும்
சாளரக் காற்று


முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம் (சுஜய் ரகு)

***

ஒட்டடைகளால்
நிறைந்திருக்கிறது
வீடற்றவனின் கனவு


மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம் (கவிஜி).

***

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்


நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை


வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாகவே தோள்சாய்கிறது
காதல் (கார்த்திகா அ)

***

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்


அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை(யின்) நிலா (கவித்தாசபாபதி )

*

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை... (கட்டாரி _)

*

ஏறிக்கொண்டே இருக்கிறேன்
இறங்கிக்கொண்டே இருக்கின்றன
படிகள்..!! (சொ. சாந்தி )

*

வாழ வேண்டும்
சாவைத் தேடுகிறான்
சங்கூதுபவன். (குமரேசன் கிருஷ்ணன் )

*

நாளைய கவலையில் நடக்கையில்
காலை இடறியது
ஒரு கல்லறை (தா. ஜோசப் ஜுலியஸ்)

*
மரண பயமில்லை
கயிற்றில் நடக்கிறான்
பசிக்கு பயந்து (மணி அமரன்)

*

போக்குவரத்து சமிக்ஞை
சிவப்பு விழ காத்திருப்பு
யாசிக்கும் சிறுமி


நடுநிசி உறக்கம்
உயரும் மேளச்சத்தம்..
நதியைக் கடக்கும் ரயில் ( ஜி. ராஜன்)


*

அரிசி வாங்கியபடி
நியாயவிலைக் கடையில்
விவசாயி (வே புனிதா வேளாங்கண்ணி

*

கல் கிடைக்கும் வரை
நாயிடம் பேச்சுவார்த்தை
ராஜதந்திரம் (கோபி சேகுவேரா)

*
பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..! (இரா.சந்தோஷ் குமார் )

*
பூட்டிய வீடு
ஆடிக்கொண்டிருக்கிறது
மழலையின் ஊஞ்சல் (பொள்ளாச்சி அபி )

*
பூட்டிய வீடு
ஜன்னல் தட்டிச் செல்லுது
புறாவும் அணிலும் (முரளி)

*

தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன் (ஜின்னா)

*

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள் (கார்த்திகா அ)



*********************************************************

குறிப்புகள்
-----------------

1. படைப்பாளிகளின் அனுமதியுடன் இவை இந்நூல் தொடரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
2. இவற்றுள் பல ஹைக்கூக்கள், சில சென்றியூக்கள் . முன்னோடி கவிஞர்கள், அறிஞர்கள் கருத்துகள் கேட்டு அதற்கேற்று பிரித்து நூலில் வெளியிடப்படும்.
3. இன்னும் சில நல்ல ஹைகூக்கள், சென்றியூக்கள் நடமாடும் நதிகள் தொடரில் காணப்பட்டாலும் இப்போதைக்கு இந்நூல் தொடருக்காக இவ்வளவே எடுத்துக்கொள்ள இயன்றது..
4. நிலாகண்ணனின் 10 ஹைகூக்களும் தனியாக "நிலவொளியில் நாரை " என்ற தலைப்பில் வேறு நிலாக்கள் 35 ல் இணைந்து இந்நூலைச் சிறப்பித்திருக்கிறது.
5. நல்ல படைப்புகளை யுகங்களுக்கும் எடுத்துச்செல்வோம். வாழ்க தமிழ். வெல்க நற்கவிதைகள் !

எழுதியவர் : எழுத்து கவிஞர்கள் (1-Apr-16, 4:13 pm)
பார்வை : 335

மேலே