காத்திருப்பு
நான் காத்திருந்த நிமிடங்கள் (வருடங்கள்)…
கடிகார முட்களாய் என் கண்கள்…
தலைவன் வரும் ஒரு வழி பாதையை நோக்கி…
இல்லாத கைகடிகாரத்தில் மணி பார்க்க தூண்டும் இதயம்…
உள்ளங்கையில் உயிரை பிடித்தார் போல் ஓர் நடுக்கம்…
சத்தமிடும் சுற்றமும் அமைதியாகும்… அலைப்பேசியை நோக்கி…
பாவம் அலைப்பேசி மட்டும் என்ன செய்யும்
நொடிக்கு ஒருமுறை அதை பார்த்து முறைத்தால்…
இந்த விரல்களிடம் சிக்கிக்கொண்டு விடுதலைக்காக காத்திருக்கும்
அலைப்பேசி…
இப்படி தலைவனுக்காக காத்திருந்த தலைவிக்கு
விடுதலை கொடுத்தான் தலைவன் காத்திருப்புக்கும்…