சலாவு 55 கவிதைகள்
வேரறுக்கும் வித்தையினை ..
எங்கிருந்து கற்றுவந்தாய் ..
.
உன் கண்களும் ..
களவாடியது என்னை ..
என் உள்ளமும் ..
நாட மறுக்குது ..
வேறு பெண்ணை ..
.
ஒற்றை சொல்லில் ..
மதி மயக்கம் ..
நீ மட்டும் தான் ..
என் சுவர்க்கம் ..
நின்று போனது ..
கண் உறக்கம் ..
.
என் உள்ளமெனும் ..
வெள்ளை பக்கத்தில் ..
உயிரெனும் வண்ணம் ..
கொண்டு வரைந்த ..
காதல் ஓவியம் நீ தானே ..
.
கை கோர்க்க வழி பார்த்தோம் ..
விழி நீர்த்து விலகி போனோம் ..
வலி போக்க தேடுகிறேன் உன்னை ..
காதல் வலி போக்க தேடுகிறேன் ..
.
வளர்ந்த செடி பூக்கும் முன்னே ..
காதல் வாசம் வீசும் முன்னே ..
வேரறுக்கும் வித்தையினை ..
எங்கிருந்து கற்று வந்தாய் ..
.....
...........................சலா,