என் மூச்சுக்காற்றாய் வருவாயா

என் மூச்சுக்காற்றாய் வருவாயா
தினம் உன்னை தேடி அலைகின்றேன்
உன் விழிகள் பேசும் மொழிகளினால்
பேசிடும் பாஷை நான் மறந்தேன்

உயிரும் காதல் உணர்வும் காதல்
தனிமையின் புலம்பலில் தவிக்கின்றேன்
ஓர் முழு நாளில் ஒருனொடியெனும்
உன் நினைவில் வரவே துடிக்கின்றேன்

நமக்கென வாழ்வில்
சுமக்கின்ற கனவினை
நிஜமாய் மாற்றிட - தினம்
தினம் முயற்சிகள் தொடர்கின்றேன்

வாழ்வது ஒருமுறை
வாழ்க்கையும் ஒருமுறை
உன் சம்மதம் அது வரும்வரை
நிச்சயம் உனக்காய் காத்திருப்பேன்

என் மூச்சுக்காற்றாய் வருவாயா ...

எழுதியவர் : ருத்ரன் (6-Apr-16, 3:47 am)
பார்வை : 81

மேலே