கலை மீது காதல்
இசையோடு பேசும் காற்று
காற்றோடு பேசும் மொழி
இரண்டும் கலந்த பாடலோடு ஆடல் நான்
இசைக்கு தாளமிடும் பாதங்களும்
மொழிக்கு பாவமிடும் பார்வைகளும்
பாட்டுக்கு உயிர் தரும் உடலசைவுகளும்
சங்கமிக்கும் அரங்கத்தின் நாயகன் நான்
அரங்கத்தின் காதலன் நான் வந்தால்
வீசில் சத்தம் தெறிக்கும்
கை தட்டல் துள் பறக்கும்
அபிநயம் என்னும் மொழிக்கு
என் பாவனை பாடசாலை
கலைஞானம் கொண்டு
தனித்துவ பாணிக்கு அடிப்போட்டு
காணும் கண்களை வேட்டையாடுவேன்
நேருக்கு நேர் பாராட்டுகளும்
என் கை வர தவமிருக்கும் பரிசுகளும்
வாங்க நடனம் நான் ஆடுவேன்
திரை நட்சத்திர அதிரடி நாயகனில்லை
என்றபோதும் நாயகன் கல்லூரியில்
பெண்களுக்குள் காதல் பூக்க செய்யும் புன்னகை காதலன் !
ஐந்து நிமிடம் மூச்சு தந்து
ஆடினால் மன்றம் வைக்க
வரிசையில் காத்திருக்கும் ரசிகைகள் கூட்டம்
காற்றோடு காற்றாய் கலந்து
பார்ப்பவர் நாடி நரம்பை
தட்டி எழுப்பும் கலையின் கலைவாணன்
என் கைகள் காற்றோடு உரசினால்
காற்றில் விண்மீன்கள் சிதறும்
என் பாதம் அரங்க தரை துள்ளினால்
மேடையில் மின்னல் பொறி ததும்பும்
இசையோடு உடல் வளைத்தால்
என் வலைக்குள் விழுவது
மதிப்பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்களும் தான்
வியப்பில்
எலும்பில்லாதவன் சிலரால்
அவன் கால் தரை தொடாது சிலரால்
அவன் மனிதனா சிலரால்
பெயர் கொண்டேன் காற்றை தன்வசம் கொண்ட கலையால்
மயிலின் சிங்கார அசைவை நாட்டியமாகி
தென்றலாய் மெல்ல துவங்கி
புயல் வேகம் பிடித்தால்
பூமியும் தலைகிழாக உருளும்
முன்பே உடலை சமைத்து
மேடையில் சூடாக பரிமாற
நொடிக்கு நொடி இசை பிடித்து
உதடுகளால் மொழி கொடுத்து
பார்வையால் கண் நடித்து
காந்தமாய் பார்வை பறித்து
உயிர் தருவேன் பாடலுக்கு
கல்லூரி மூன்றாண்டு
என் புகழ் வாழும் இன்னும் நான்காண்டு
போட்டிக்கு வெற்றி தந்து
கலை மீது காதல் கொண்டு
அழியா கலை கற்ற
அழியா கலைஞன்
பரிசு மட்டுமல்ல
காலம் கடந்து என் பிரதி
பாடல் நினைவுகளில்
உயிர்த்திருக்கும் நடனக்கலைஞன் . . . . .