எங்கே அவள் எங்கே அவள் - நெஞ்சே எழு - இசையில்

பனி விழும் மலர்களை கண்டாலும்,
அழகிய உன் முகம் மறவேனா!
காகித பூவும் மலர்ந்திடுமே!
கண்ணே! உன் வாசம் பட்டாலே!
முகில் வந்து உன்னை அழைத்தாலும்,
முழு மதி உனை நான் தொடர்வேனே!

எங்கே அவள்? எங்கே அவள்?
எங்கே அவள்? எங்கே அவள்?
எந்தன் கண்கள் தேடிடுதே!

கனவில் காதல் கொண்டாலும்,
நிஜத்தில், மோகம் தீர்ந்திடுமா?
உன் இடையில் இதழ்கள் பதிந்தாலும்,
என் இதயம்,
போதும் என சொல்லிடுமா?
உன் நிழல்கள் விலகி சென்றாலும்,
உன் நினைவுகள் மறையாதே!

எங்கே அவள்? எங்கே அவள்?
எங்கே அவள்? எங்கே அவள்?
எந்தன் கண்கள் தேடிடுதே!

இப்போதும், எப்போதும்
நீயின்றி வாழ்வேனோ?
கண்மூடி, நான் திகைத்தால்,
வானவில்லாய் வந்திடுவாய்!
கலங்காதே! விலகாதே!
விடியலை நோக்கி செல்வோமே!

எங்கே அவள்? எங்கே அவள்?
எங்கே அவள்? எங்கே அவள்?
எந்தன் கண்கள் தேடிடுதே!

எழுதியவர் : Sherish பிரபு (13-Apr-16, 6:48 pm)
பார்வை : 429

மேலே