தூக்கத்தை விற்பவர்கள்

தூக்கத்தை
சிலர்
விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்
பணத்திற்காக..
சிலர்
வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
பணம் கொடுத்து...

அலுப்பில்லாமல் டீ ஆத்தும் டீக்கடைக்காரர்!

விடிவதற்குள்
மொட்டு மலவதற்குள் விற்றுவிட விலைக்குறைப்பில் பூக்காரி!

யாராவது வருவார்கள் எதிர்பார்ப்பில்
பாய்க்கடை பிரியாணி பொட்டலங்கள்!

வாகன ஒலிக்களுக்கி டையே குட்டித்தூக்கம் போடும் பிளாட்பார வாசிகள்!

நடுசாமத்தில் நாய்க்குரைப்புக்களுக்கிடையே
அவளுக்காக கவிப்பாட
நிலவை வம்புக்கு இழுக்கும் காதல் கிறுக்கன்!

வேலைக்காகவோ
படிப்பிற்காகவோ
ஏதேனும் விசேஷத்திற்காகவோ
பயணப்பட்டுக்கொண்டிருப்பவர்கள்
அவர்கள் பத்திரமாய் தூங்கி செல்ல
தூங்காமல் ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள்!

தெரு விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சிவப்புவிளக்காய்
தெருவோரம் கைக்காட்டும் அழகு பெண்!

சேர்த்து வைத்த சொத்துகளோடு சேகரமாய்
வீட்டினுள் தூங்க
தெருக்கொரு கூர்க்கா!


**********************************
தூக்கத்தை விற்பவர்கள்
***********************************

- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (13-Apr-16, 7:54 pm)
பார்வை : 3334

மேலே