அறிந்தும் அறியாமலும் --முஹம்மத் ஸர்பான்

உன் நிழலில் நான்
பூவாய் மலர்வேன்.
உன் இதழில் நான்
மொழியாய் ஒலிப்பேன்.
உன் காலில் என்
விரல்களை செருப்பாய்
நான் தந்திடுவேன்....,

காற்றுக்கு தெரியாது
அவள் இதயம் என்
சுவாசத்தை தீர்மானிக்கும்
இரகசியம் என்று......,

அவளும்
நானும் சாலையோரம்
ஒன்றாய் செல்லும் போது
வானம் கூட தரையிறங்கி
வருகிறது..நிலா போன்ற
அவள் முகத்தால்...

அவள் ஒரு அழகான நிலவு
நான் நிலவை தாங்கும் விண்
என்பதால் என்னை அறிந்தும்
அறியாமலும் வாழ்கின்றேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-Apr-16, 1:58 am)
பார்வை : 242

மேலே