தரிசனம்

தினம் தினம் உந்தன் தரிசனம்
காண வேண்டும் கரிசனம்
ஓடும் உன்பின்னே
ஓடும் காலமோடு
வேண்டும் உந்தன் அரியாசனம்

என்னை யறியாமலே அனுதினம்
உன்னை சுற்றும் என் புவனம்
கண்ணோடு காண
ஈர நெஞ்சோடு
என்னைக் கட்டும் ஏகபந்தனம்

நாளோடு நான் காணும் நளினம்
காதல் கொள்ளும் தினம் ஜனனம்
உன்னை நினைக்க
உண்மை உரைக்க
நெஞ்சோடு காணும் தூவானம்

- செல்வா

எழுதியவர் : செல்வா (17-Apr-16, 10:43 am)
Tanglish : tharisanam
பார்வை : 128

மேலே