அம்மா அழகே

அழகுணர்ச்சி..

என் அம்மாவில் இருந்து தொடங்கும்..

அம்மா... என் அழகே...
அருகில் இல்லாவிட்டாலும்...
உன் அன்பு என் மனதில்...
உன் உருவம் என் கண்ணாடியில்...

அன்று முதல் இன்று வரை...
நான் பாரமானேன் அவளுக்கு...
மனதில் பாரமானேன் அவளுக்கு...

முகம் முழுக்க புன்னகையோடு...
நெஞ்சில் என் கனத்தோடு...
என்னை பாராட்டி சீராட்ட...
தயங்குவதில்லை இப்போதும் ...

என் போக்கில் என்னை விட்டு ...
குத்தல் பேச்சு... குடைச்சல் இல்லாமல்....
இந்த தடவையேனும்...
இதமாய் பதில் தருவேனா...
ஏக்கத்தோடு என்னை பார்க்கும்
என் அழகி... என் அம்மா....

ஊர் பேசும், உலகம் பேசும்,
என்றெல்லாம் கூறி,
என் பாதையை மாற்றாமல்...
என் உணர்வை புரிந்து...
என்னுடனே நடந்து...
தளர்ந்து போய்...
பின் தங்கி விட்டாய்....

சுறுசுறுப்பாய் இங்கும் அங்கும்...
ஓடியாடிய உன் ஒளி...
மங்கி கொண்டே... இப்போது ...

நன்றி ... அம்மா...
என் குறை, என் நிறைகளோடு,
என்னை மாற்றாமல்...
மனிதனாய் வாழ விட்டாய்...

கற்று தெரிந்ததை விட...
பட்டு தெளிந்தேன் நான்...

இன்னும் நீ சொன்ன வார்த்தைகள்...
என் காதில்...
"என்னை போல், உன்னை போல்,
உன் தந்தையை போல் , உன் பாட்டனை போல்,
பாட்டியை போல் .... ஏதோ ஒன்றை ...
ஞாபகப்படுத்தி கொண்டு...
ஒரு குட்டி நான் வேண்டும்."..

தாயே தயை கூர்ந்து...
மன்னித்து விடு...
வழக்கம் போல்..
இப்போதும் சொல் பேச்சு...
கேளா பிள்ளை நானாகி விட்டேன்...
என்னோடு முடியட்டும் என்...
ஜென்ம தொடர்பு...
என்னுடைய நல்லவை...
என்னுடைய தீயவற்றோடு...
இறுதி தழலில் எரிந்தே ஒழியட்டும்...

உன் மார் பாலில்...
எதோ ஒன்று...
என் குருதியில் கலந்து...
என்னை இப்படியாக்கிவிட்டது....
தனியே நான் வாழ...
என்னை தைரியப்படுத்தி விட்டது...

வணங்கி எழும் போதெல்லாம்....
நல வாழ்வு வாழ...
என்னை வாழ்த்தி விட்டு...
உன் முந்தானையால் மறைத்து ...
கொள்வாய் உன் கண்ணீரை....
நான் முந்தியோ, நீ முந்தியோ...
மறு பிறவியிலும் நான் உன் ...
மகனாகவே வேண்டும்...
அதிலாவது உன் இன்ப-த்தை...
நான் கூட்ட வேண்டும்...

வரம் கொடு.... அம்மா...
ஏழு ஜென்மமும்...
நானே உன் பிள்ளையாக...
அறுதியிட்டு கூறுகிறேன்...
அணுஅணுவாய்...
அன்பில் உன்னை நனைய வைத்து...
சராசரி மகனாக...
நங்கையொடு நல்வாழ்வு கூட...
தழைக்க வைப்பேன் உன் சந்ததியை...

எனக்கு தெரியும்...
என்னை ஏமாற்ற மாட்டாய்...
இன்பமாய் என் வாழ்வு...
இறுதி பெற...
ஆசீர்வாதம் அளிப்பாயா?..... ஆனந்த் வி

எழுதியவர் : ஆனந்த் வி (17-Apr-16, 1:21 pm)
Tanglish : amma azhage
பார்வை : 337

மேலே