என் தலைவியின் தாகம்
வாடா... என்னை வருட வாடா...
வருசமென்றாலும் என்னை
வசமாய்ப் பிடித்து இம்சை செய்ய
வாடா...
உன் விரல்களுக்குள்
என் விரல்களை இறுக்கி
உசும்பாமல் என்னை அணைத்துவிடு...
என் அணுக்கள் ஒவ்வொன்றும்
விடுதலை மனு தரும் வரை
என்னை விட்டுவிடாதே...
ஒரு அணு மனு தராதிருப்பினும்
என்னை விட்டு விடாதே...
மூச்சு முட்டும் வரை
என்னை முகரு ...
எனக்குள் மூழ்கி முத்துக்குளி...
எடுத்த முத்தை தொலைத்து
மீண்டும் மூழ்கி முத்துக்குளி...
மூச்சு திணறினால்
என் மூச்சிலிருந்து சுவாசி...
விடியும் வரை தேடல் என்று
விரைவில் தீர்த்திடாதே
இருள் வேண்டுமென்றால்
போர்வையை மூடி
என்னில் போர் செய்
உன் விரல் நகங்கள் கிழித்த
காயங்களைக் கண்டு
என்னை சிரிக்க வை...
நான் வேண்டாம் என்றால்
நீ வேண்டும் என்று அடம்பிடி
மாதவிலக்கானால்
முத்தத்தால் என்னை
துப்பரவு செய்
வாடா... இன்னும் இன்னும் உண்டு
வாடா...
***