மூனாறு குன்றினிலே
மூனாறு குன்றினிலே
முக்கனிகள் மலர்ந்திருக்கு
தேனொழுகும் மனதினிலே
தேன்தமிழும் பூத்திருக்கு
மன்னனவன் தீண்டுகையில்
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே
கான மழை நெஞ்சுக்குள்ளே
உன் நெஞ்சோரம் ஊஞ்சல் கட்டி
மங்கையவள் உறங்குகையில்
காதல் மோகம் கண்ணுக்குள்ளே
இதய தாகம் மனசுக்குள்ளே
வண்ண வண்ண மலர்கள் வந்து
பூவிதழால் பாடுதடா
ஏக்கமெல்லாம் தேடிவந்து
தனிமையிலே கொல்லுதடா
நீ மௌன ராகம் பாடுகையில்
மோனமதில் ஆழ்ந்திடவே
மோகவிழி பார்வையிலே
மோகமுள் தைக்குதடா என் இதயத்தை தேடிவந்து

