காதல் என்பது - 4
தன் உணர்வை பகிர்ந்து
கொள்வதில்
தனி சுகம் உண்டு
அதுவும் தன்னவனிடத்தில் ....
அலாதி சுகம் உண்டு
அதை முழுதும் அனுபவித்தாள்
இனி,
அவன் பக்கம் பார்ப்போம்
காதல் மயக்கம்
அவனை சூழ்ந்த போதும்
உள்ளங்களின் புரிதலால்
அவளின் ஒவ்வொரு
சொல்லும்
அவன் மனதில்
தஞ்சம் புகுந்தன
அதனை அவன்
பத்திரப்படுத்தி
வைத்ததை
அவள் அறியவில்லை
மாறாக அவன்
மௌனம் காத்ததால்
சற்று கலங்கிப் போனாள்
சந்தர்ப்பம் சரியில்லையோ
என எண்ணினாள்
காதலுக்கு கண் இல்லை .....
செவி உண்டு என்பதை
மறந்தாள்
அவனைப் பற்றி
நன்கு தெரிந்ததால்
சற்று பொறுப்போம்
என தனக்குத் தானே
சமாதானம் சொன்னாள்
அவனும் பேசினான்
காதல் பேச்சு
தன் உயிரே அவள்
என்றான்
சகலமும் அவள்தான்
என புரிய வைத்தான்
அவள் தன் அருகில்
இருப்பதால்
எதையும் சாதிக்க
முடியும் என
சொன்னான்
அவள் சுவாசத்தால்,
தான் உயிர் வாழ்வதாக
சொல்லி,
காதலுக்கு புது
விளக்கம் அளித்தான்
உணர்ச்சியின் விளிம்பில்
அவன் இருப்பதை
உணர்ந்து
அவனை தன்வசம்
அனைத்தாள்
அவனுக்கும் அது
தேவைப்பட்டதால்
அவளோடு இணைந்தான்
அதில் சிறு அழுத்தம்
கொடுத்து,
அதன் மூலம்
தான் என்றென்றும்
அவளுடன்
உறுதுணையாய்
இருப்பேன்
என்று புரிய வைத்தான்
அவளுக்கும் அது
புரிந்தது
அதுவே,
காதலின் வலிமை
ஆகும்.
(தொடரும்)