10 செகண்ட் கதைகள் - இப்போது குளிர்கிறதா
அது ஒரு குளிர்கால பண்டிகைக்காலம். ஒரு சிறுவன் ஒரு கடை முன் ஏக்கத்துடன் நின்று அந்தக் கடையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஒரு அழகிய இளம்பெண்,
"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?".
"மிகவும் குளிர்கிறது. நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். கடவுள் எனக்கு அந்த ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" என ஏக்கப் பெருமூச்செறிந்தான், அந்த ஏழைச் சிறுவன்.
அதைக் கண்டு உருகிப்போன அந்தப்பெண், அவனை கடைக்குள்ளே அழைத்துச் சென்று அவன் விரும்பிய அந்த ஸ்வெட்டரை வாங்கிக் கொடுத்து அணிவிக்கச்செய்தாள்.
இப்போது குளிர்கிறதா?
இல்லை, அக்கா, மிகவும் இதமாக இருக்கிறது......
ரொம்ப சந்தோஷம். நான் போய்வருகிறேன்.....
அக்கா, ஒரு நிமிஷம்....உங்களை ஒண்ணு கேக்கட்டா?
என்ன? கேளுப்பா.....
இத்தனை அழகாக இருக்கிறீர்களே......இத்தனை பாசமாக (கருணையாக) நடந்து கொள்கிறீர்களே.....நீங்கள் கடவுளின் மனைவியா?
(கொஞ்சம் கூட்டிக் குறைச்சு from The Book of Wit and Humour, by Peter Gagney)