தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 50 = 90

கன்னி உன்னை எண்ணி
போட்டேன் போதை தண்ணீ
ராணி என்னோட வா நீ
நீ வந்தால் விட்டுடுவேன் தண்ணீ

காதிலிலே தோல்வி கண்டா
நாங்க நாடுவது இதைதான்
தேவதாசு போல தாடிவைத்து
நாங்க குடிப்பதும் இதைதான்

மலிவு விலை மதுவுக்கு
மவுசு ரொம்ப இருக்கு
மனசு நொந்த யாவருக்கும்
மது மேலொரு கிறுக்கு

உன்னாலதான் போடுறேன் நான் தண்ணீ
என்னை உருகுலைய வைக்கிறீயே கன்னி
இப்பவாவது என் நிலையை எண்ணி
என்னை ஏத்துக்கோ என்னுயிர் பொன்னி


இவரு பேரு இராஜ துரை
இவரு போட்டாரு நாலு ஒரை
இப்பப்பாரு இவரு நிலை
இடுகாட்டு தலைகாணி ஒரை

இந்தநிலை எனக்கு வரவேணுமா
உன் காவிய கண்ணன் நானுமா
காதல் கொண்டேன் கண்ணியமா - என்
கவலையை தீர்த்தால் புண்ணியமாம்!

உன்னாலதான் போடுறேன் நான் தண்ணீ
என்னை உருகுலைய வைக்கிறீயே கன்னி
இப்பவாவது என் நிலையை எண்ணி
என்னை ஏத்துக்கோ என்னுயிர் பொன்னி

எழுதியவர் : சாய்மாறன் (29-Apr-16, 10:05 pm)
பார்வை : 117

மேலே