வானமே எல்லை
வானமே எல்லை என ;
பறந்து செல்லும் பறவைகளும் ;
தேவைக்கேற்ற உணவுகளை ;
தேடி அலைந்து அடைகிறதே !
படிப்பினையும் அதிலுண்டு ;
பரந்த மனதோடு நீ யோசி !
ஐந்தறிவு விலங்கினமும்;
அலைகிறதே அதன் தேவைக்காக !
எல்லை ஒன்றும் அதற்கில்லை ;
ஏமாந்தும் திரும்புவதுமில்லை !
ஏற்க மறுக்கும் ஆறறிவோ;
எல்லை ஒன்றை வகுத்துக்கொண்டு !
ஏய்ச்சி பேச்சி வாழ்கிறதே ;
ஏளனமாய் திரிகிறதே !
எண்ணத்தை ஏணியாக்கி ;
எரிமலையை துடுப்பு போட்டு ;
ஏழ்மையை விரட்டியடிக்க ;
எழுந்துவா! விண்ணைத்தொட விரைந்து வா !