அன்னையர் தினத்தில் என் அம்மாவிற்கு என் முதல் கவி
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழமைகளே...
என் அம்மா-விற்கு என் முதல் கவி
கொலகுடியார் வீட்டு மூத்த இளவரசியே...
மூலன் வீட்டு மூத்த அரசியே...
பத்து திங்கள் என்னை கருவறையில் சுமந்தவளே...
நான் கருவறையில் இருக்கும்போதே என்னை காதலித்த என் காதலியே...
என்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்த என் அன்னையே...
நான்கும் பெண்ணா பிறந்துவிட்டதென...
எத்தனை நாள் அழுதையோ தவம் இருந்தயோ...
ஐந்தாவதாயை என்னை பெற்றெடுத்தாய்...
ராஜாவை போல் வாழவேண்டும் என்பதற்காக...
"ராஜா" என்று பெயர் சூட்டினாயோ...
வெயில்பட்டா கருப்பாகிருவேனு வெயில்படாமல் வளத்தாயே...
பள்ளிக்கு அனுப்பும் போது அழுதுகிட்டு அனுப்பினாயே...
என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியமுடியாமல்...
பள்ளி படிப்பை பாதியில் விட்டுட்டு வந்து நின்ற போது...
பிடித்ததை படின்னு சொல்லி படிக்க வைத்தாயே...
நான் நிழலில் இருக்க வேண்டும் என்பதற்காக...
நீ நாள்தோறும் வெயிலில் வாடினாயே...
மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வரும்போது...
மகன் நாக்கு செத்துப்போய் வருவான்னு...
பிடித்ததுலாம் சமைத்து போட்டு சாப்பிட வைத்து அழகு பார்தாயே...
விடுமுறை முடிந்து விடுதிக்கு கிளம்பும் போது...
பெத்தமகனை பிரியமுடியாமல் கண்ணீரோடு வழியனுப்பினாயே...
நானும் கண்ணீரோடு பிரியமுடியாமல் பிரிந்து வந்தேனே...
நான் ஆசை பட்டதையெல்லாம் நிறைவேற்றி வைத்தாயே...
நான் இதுவரை உன் ஆசையை கூட கேட்டதில்லையே...
உன் ஆசைப்படியே என் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வேனே...
ஆ.மு.ராஜா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
