தந்தை மனம்
சில்லென்று காற்று சிலிர்க்கின்றது..
சின்னஞ்சிறு சாரலும் பூமியை நனைக்கின்றது ...
வலுவான இடியோசை கேட்கின்றது-அதுவும். ,
வலுவற்ற என் இருதயத்தில்
வலுக்கட்டாயமாக கேட்கின்றது. ..
தென்றலின் கீதமாய் ......
காதலின் உதயமாய்-அந்த
கதிரவனின் பிம்பமாய்....
விண்ணில் என் அம்புலியே தோன்றிவிட்டான்...
ஆனால் இன்னமும் காணவில்லை
என் கண்மணியை...
-இப்படிக்கு மகளின் வருகைகாக
காத்திருக்கும் "தந்தை மனம் . .!