வானம் என்ற வாரணம்

வானரசர்கள்
பூமிப்புலவனை கொளரவித்து
அணிவிக்கும்
அங்கவஸ்திரம்

ஆகாயம் தரும்
இந்த
அன்புக் கொடை..
பூமியெங்கும் இது
திறந்து வைப்பதோ
மகிழ்ச்சிக் கடை!

பூமியெங்கும்
கட்டப் பட்ட
நீர்த் தோரணம்!

கடலின் தண்ணீரைக்
குடித்து விட்டு
தன் துதிக்கைகளால்
பீச்சியடிக்கிறதா…
வானம் ..
என்ற வாரணம் ?

வானக்காதலன்
இந்த வெள்ளி ஜரிகை பட்டினை
பூமிப்பெண்ணுக்கு
வாங்கித்தர…
அவள்
அப்படித்தான்
பூரித்துப்போகிறாள்.

வானவர்கள்
பூமியை வாழ்த்திப் பாடும்
வாழ்த்துப் பாடல் ! .
தெய்வங்களின்
திருவிளையாடல்.!

பூமியில் தினம்
பூக்கள் பூப்பதற்கு
வானம்தான்
இப்படி நாளும் நீர்
ஊற்றுகிறது..

மழை தந்த மகிழ்ச்சியில்
மேகங்களும் கூட
வானில்
உழவனைப் போல்
ஏரோட்டுகிறது .?

எழுதியவர் : (15-May-16, 12:17 pm)
பார்வை : 204

மேலே