மணம் பரப்பிய மலர்கள்

அழகிய கொடிமலர்கள்!
எழில் மிகு சூரிய உதயம்
கண்டு மயங்கி மெய்மறந்து
சொல்கின்றன காலை வணக்கம்!

தன் பணி முடிந்து
மாலை மயங்கும் வேளை,
உழைத்துக் களைத்த சூரியன்
பிரியாவிடை பெறும் மலர்களிடம்!

மாலையில் முகம் வாடி அங்கேயே
அவைகளின் வாழ்வை முடித்து
தரையை முத்தமிடும்! அந்தோ!
மணம் பரப்பிய மலர்கள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-16, 2:45 pm)
பார்வை : 81

மேலே