ஆசைப்படுவதும் ஆசைதானே

விண்ணைப் பிளந்து
வீடு கட்ட ஆசை.
கடலைக் கடந்து
கால் பதிக்க ஆசை.
நிலவைப் பிடித்து
சோறூட்ட ஆசை.
ஆதவனை அழைத்து
அலங்காரம் செய்திட ஆசை.
மேகத்தை எடுத்து
மெத்தை செய்திட ஆசை.
மலைகளை கரைத்து
மாலை செய்திட ஆசை.
பட்டாம்பூச்சி பிடித்து
பட்டம் விட ஆசை.
பூக்கள் பறித்து - புதிய
பூமி செய்ய ஆசை.
ஆசை ஆசை எல்லாமே
ஆசை தான்.
ஆசைப்படலாம்
ஆசைப்படுவதும்
ஆசைதானே....

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (16-May-16, 5:36 pm)
பார்வை : 406

மேலே