தரை நிற திரை - காதலாரா

தரை நிற திரை - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~

உறைபனி நடுவில்
உன் உரை பனி ...
காதணி வடிவில்
கடல் கரை நுனி..

ஒரு நொடி நடிப்பில்
சுயம் நிறை பிணி ..
சிறு அடி துடிப்பில்
புயம் உடை இனி ...

போர்க்கொடித் தகர்ப்பில்
ஞான நிலை அறி..
அகமூடித் திறப்பில்
தான கலை விரி..

பாலைவன பரப்பில்
குளிர் உடல் சிலை..
செய்மதி நுகர்வில்
ஒளிர் நிழல் விதை...

நடுநிசி இரவில்
கூடல் ஓயா சதை ..
கொடும்பசி உணர்வில்
வாடல் தாயப் பிழை..

இறை கரு உருவில்
காதல் பெண் குடை ..
தரை நிற திரையில்
சாதல் பின் விடை ...

- காதலாரா

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் ) (20-May-16, 7:11 am)
பார்வை : 94

மேலே