நம்பிக்கையில் வாழ்க்கைப் பயணம்

நீங்கள் உங்களின் வாழ்க்கை வழியாக பயணம் செய்கையில்,
நிறைய முறை பல முடிவுகள் எடுக்க வேண்டி வருமே....
அந்த முடிவுகளுக்கான தேர்வுகள் கடினமானவையாகவும்,
அதற்கான தீர்வுகள் பற்றாக்குறையாகவும் இருக்கலாமே....
துன்ப மழை அணிவகுப்புகள் நடத்தலாமே....

சில சூழ்நிலைகளில் நீங்கள் வெறுமனே அங்கும் இங்கும் அலைய வேண்டி வருமே....

உங்களின் தைரியத்தை ஒன்று திரட்டி,
ஒரு திசையைத் தேர்ந்தேடுத்து,
உங்களின் வாழ்வில் புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடுப் பயணத்தைத் தொடருங்களே.....

உங்களின் பிரச்சினைகளைத் தூர விரட்டி, ஒவ்வொரு படியாக அடியெடுத்து வைத்து முன்னேறுங்களே....

" மாற்றம் ", என்ற செயல்முறை கடினமானதாகவே தோன்றுமே....
அதனாலே,
அந்த மாற்றத்தால் கிடைக்கும் உற்சாகமான, அமைதியான வாழ்வைப் பற்றியே சிந்தியுங்களே....

நீங்கள் சாகசங்கள் நிகழ்த்த வேண்டியதும் வரலாமே...
அதற்காக, " மற்றவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள் ", என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்களே...

" உங்களின் விருப்பங்களும், கனவுகளும் ஒரு நாள் நனவாகுமே ", என்ற நம்பிக்கையே உங்களை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லுமே.....

ஒருவேளை,
நீங்கள் நல்ல நட்புகளை அடையாளம் காணலாமே....
அதற்கு உங்களின் குறிக்கோளே காரணமாகலாமே....
அந்த நட்புகளால் புதிய வழிகளையும், புதிய அனுபவங்களையும் அறியலாமே....

நீங்கள் உங்களின் நிலைகளை சாவலாக்கி,
சமாளிக்கையில்,
நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்வீர்களே....

ஒருவேளை,
நீங்கள் சிறிதும் எதிர்பார்க்காத இடங்களுக்குச் செல்லலாமே.....
நீங்கள் அதுவரை பார்த்திராத நிகழ்வுகளைக் காட்சிகளாகப் பார்க்கலாமே.....
அற்புத பயணமாகவும் அமையலாமே.....
நட்சத்திரங்களைத் தாண்டியும் பயணம் செய்யலாமே......

ஒருவேளை,
நீங்கள் அரவணைப்பு, அன்பு, பாசம், அக்கறை போன்ற உயரியக் குணங்களைக் காணலாமே.....
இவ்வுலகில் சிறந்த ஒருவரைக் கூட காணலாமே.....
அதுவே உங்களை நடுநிலைத் தன்மையுடன் இருக்க உதவலாமே.....
கதைகள் மற்றும் அவர்களின் சிறந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து, உங்களின் உணர்வுகளையும் கேட்கலாமே.....

ஒருவேளை,
உங்களுக்கு ஆறுதல் தருவது உங்களின் நண்பர்களாகவே இருக்கலாமே.....
அவர்களே நீங்கள் செய்யும் அனைத்திற்கும் ஆதரவாக இருக்கலாமே......
அதற்கெல்லாம் காரணமாவது, " நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் மிகச் சரியாக இருக்கும் ", என்ற நம்பிக்கையே......
அதே நம்பிக்கையை உங்களின் மீது நீங்களே வைத்தால் தான் வெற்றி என்பது சாத்தியமாகுமே.....

உங்களின் கால்கள் முன்னோக்கி மட்டுமே அடியெடுத்து வைப்பதாக இருக்கட்டுமே.....

உங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளாக வாழ்ந்து, வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்களே.......

ஒருபோதும் திரும்பிப் பார்க்க வேண்டாமே....
ஏனெனில்,
அந்த வழியில் நீங்கள் திரும்பி போக முடியாதே......!

எழுதியவர் : சிவனணைந்த பெருமாள் (20-May-16, 8:34 pm)
சேர்த்தது : அழிவில்லான்
பார்வை : 1053

மேலே