என்னுள் ஓர் உயிர்
புத்தம் புது
மலர் இது...புதிதாய்
வரும் உறவு இது..
நிறம் தெரியா கருவறையில்
உயிர் ஒன்று வளர்ந்தது..
வயிற்றை தொடுகையில்
ஏதோ ஒரு உணர்வு
தெரிந்தது...
இது வரை இல்லாத
உணர்வு இது..
தினமும் என்னுள்
உதைக்குது..உன்
பிஞ்சு விரல் தொடவே
ஆசையாய் இருக்கிறது..
உன்னை அள்ளி முத்தமிட
என் கைகள்
காத்திருக்கிறது...
வலியோடு உன்னை
வரவேற்கிறேன் என்
கண்மணியே...
நம் உறவு
தொப்புள் கொடியில்
இருந்தது..
அது பிரியும் நேரத்தில்
என் உயிரும் போய்
திரும்புது..
விழியில் கண்ணீர்
பொங்க நானும் அழுவேன்
உன்னோடு
பத்து மாதம் உயிருக்குள்
உயிராய் இருந்தாய்
என்னோடு..
முதல் வாழ்த்து
சொல்லும் உன் தந்தையின்
முத்தம்...
இதுவரை கேட்காத
உன் அழுகையின்
சத்தம்..
விண்ணிலே தெரியும்
நிலவே..
மண்ணிலே பூத்த
மலரே..
வார்த்தையில் வரும் கவிதையே
என் வாழ்கையில் வந்த புன்னகையே..
ஒவ்வொரு விடியலும்
உணர்கிறேன்
விடிந்தது கூட தெரியாமல்
நீ உறங்குவதை...
கண்ணிலே கனவோடு
நெஞ்சிலே நினைவோடு
காத்திருக்கிறேன் என் கண்ணே
வந்து விடு..உன்னை முத்தமிட..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
