நம்பிக்கைப் பிடி

காலத்தின் பிடியில்
கைக் குழந்தைகளானோம்

கதிரவன் பிடியில்
காட்டு புஷ்பமானோம்

அன்பின் பிடியில்
அடிமைகளானோம்

இரக்கத்தின் பிடியில்
ஏழைகளா னோம்

பாரம்பரியப் பிடியில்
பயித்தியமானோம்

கவர்ச்சிப் பிடியில்
கைதிகளானோம்

விலைவாசிப் பிடியில்
வெற்றர்களானோம்

உண்மையின் பிடியில்
உடும்புகளானோம்

வாழ்க்கை பிடியில்
வறுமை யுற்றோரானோம்


உடல்நலப் பிடியில்
நோயுற்றோரானோம்

இப்படி எத்தனைப்
பிடிகளைப் படிகளாக்கினாலும்
நம் தெம்பின் பிடியை
விடுவதில்லை !!!!!!!!!!!
அதுதான் நம்
நம்பிக்கையின் பிடி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (30-May-16, 5:22 pm)
பார்வை : 256

மேலே