தினம் ஒரு பாட்டு இயற்கை - 12 = 122

வைகறை மேகம் பூத்தூவ
கடலலைப் பாடும் சுகராகம்
மீட்க கேட்பது தனியின்பம்
மெல்லிய மனது இளைப்பாறும் !

தாமரை இலை தலைமேலே
தண்ணீர் பட்டால் ஒட்டாது
தாமிர பரணி ஆற்றினிலே
தண்ணீர் என்றும் வற்றாது

நாள் முழுதும் அய்ந்தருவி
ராகம் பாடும் நீர்க்குருவி
அங்கே சென்றால் கும்மாளம்
போடச் சொல்லும் குத்தாலம்

இயற்கையின் பிறப்பிடம் இதுதானோ ?
இதன் மூலிகை மரங்கள் சுகம்தானோ ?
செயற்கை சுவாசம் பெற்றுக் கொண்டு
இயற்கை வளங்கள் செழிப்பதில்லை…!

பறவைகள் போடும் எச்சங்களால்
விதைகள் ஓங்கி வளர்வது நிஜம்தானே !
மனிதர்கள் வீசும் மாசு கழிவுகளால்
மலைகள் சுமப்பது பெரும் பழிதானே !

வானம் ஒருநாள் விடுப்பெடுத்தால்
பூமியில் உயிர்களின் நிலை என்ன ?
ஊதியம் கொடுப்பதை நிறுத்திவிட்டால்
உழைத்த உழைப்புக்கு பலனென்ன ?

கானம் பாடும் கவிஞன் யாரும்
ஞானம் தேடி அலைவதில்லை
மானம் காக்கும் மனித மனங்கள்
ஈனச்சொல்லை மதிப்பதில்லை

வானம் ஓட்டை விழுகாது
பூமி அதனை விரும்பாது
சுடர் கொண்டுவரும் விடியலை
சிரம் தாழ்ந்து வரவேற்போம்..!

நிலவின் விடுமுறை தினத்தில்
நீலவானில் கருப்பு இரவு
பகலின் வெளிச்சப் பொழுதில்
பால் நிலவு துயிலுது எழவு

சுட்டெரிக்கும் சூரியனே – உன்னை
சுட்டெரித்தவன் யாரு ?-அந்த
கட்டையில போறவனை
என் கண்னெதிரே காட்டு !

வெட்கமேன் உனக்கு ?- இதில்
வெட்கப்பட என்ன இருக்கு ?
நட்சத்திர கூட்டத்துக்கு
நீ தானே தலைமை பொறுப்பு !

வீரம் விளைந்த பூமி
சோரம் போய் கிடக்கு
பேரம் பேசும் உலகில்
சாரம் சரிந்து கிடக்கு !

எழுதியவர் : சாய்மாறன் (1-Jun-16, 11:06 am)
பார்வை : 83

மேலே