காதலெனும் விஷம்
இசை மகளே
இனியவளே
இயல்பிதுவென்றெனக்கு
சொன்னவளே...
இன்பத்தின் பாதையிலே
இழுத்துச் சென்றவளே...
மனமெல்லாம் இலயித்தவளே....
உன்னோடு வாழ்ந்தால்
சொர்க்கம்.....
சொற்பமாய் கதை பேசி
சொக்க வைத்த கண்மணியே
கால் வலிக்க
காத்திருந்தும் காணலியே
கொலுசு சந்தம் ....
அறுசுவையில் ஒருசுவையே
உனை தேடுத்தடி
உள்ளமெல்லாம்...
துடுப்பிலந்த தொணியாய்
நட்டாற்றில் விட்டாயே...
சேர்ந்த இடம் சேராக
சிக்கிகொண்டேன்
பெண்மணியே....
சுவையில்லா உணவுன்னும்
சிறைக்கைதி போலானேன்...
உப்பிட்டேன் வாழ்வின்
சுவைக்கூட்ட மாட்டாயோ...
கொலுசு சத்தம் கேட்டு
வாசல்வந்து நிற்கிறேன்...
வாசமலரே நீ
வசப்படமாட்டாயோ...
சொல்லாமல் விட்டதால்
உணராமல் போனாயோ...
இனி சொல்லும் நிலை
எனக்கில்லாமல் போனேனே...
மனமெல்லாம் உணைநினைத்து
இனிப்புண்டாலும் கசந்து கிடக்கிறேன்...
என்வாழ்வின் ஒருப்பாதி
சுவையற்றிருக்கிறேன்...
உன்னால்......
நான் இழந்ததை
சொன்னால்
நகைப்பார்கள்
முன்னாள்...
ஒரு தலையாய்
உன்னை நினைத்து
புலம்புகிறேன் இந்நாள்...
உன் பிரிவு தரும்
வேதனையை விட
உன் நினைவு தரும்
வேதனை பெரிது...
காதலெனும் விஷமருந்தி
மரணப்பயணம் மேற்கொண்டேன்....
மரணமிந்த சடலத்தை
அழித்துவிடும்....
அவள் நினைவை....