சுழலலைத் திரிதல் - காதலாரா

சுழலலைத் திரிதல் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனை எரித்த எரிநட்சத்திர
துகள் படிந்துக் கிடக்கும்
கர்வம் குடித்த கவிதையில்
முரணின் முகம் உடுத்திய
அத்தனை உயிர் எழுத்தும்....
உன்னுதடு உரசியச் சிலிர்ப்பில்
வெப்பத்தின் வேர் பிடித்து
தேகத்தின் நீர் குடித்து....
நிறம் மாறா நிழலிலும்
தாகம் ஊறிய உச்சியென
சொல்லாத தேதிகளில் ....
நுரை உடைத்த ஒலியை
நரைத்த முடியின் நுனியில்
தைத்து வைத்து மிதக்கும்
வைர வரியின் வயதென...
யுகம் கடந்த பின்னும்
கசிந்து விடாக் காதலை
கார்பன் அணுவிலடைத்து
அண்டத்தில் அலைகிறது...
உம் சுழலலைச் சுருக்கத்தில்
பரிணாம சிறுக் கூடென ...

- காதலாரா ..

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் ) (2-Jun-16, 6:48 am)
பார்வை : 85

மேலே