கூடலாமதுவும் களிப்பு

நெடுநாட்கள் குடுவையில்
சேமிக்கப்பட்ட திராட்சை ரசமும்,
எங்கள் காதலும் இணையானது!

ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல
உண்டாக்கும் சுவை திகட்டாதது,
என்றும் அதுவே நிலையானது!

திராட்சை ரசம் உண்டால் களிப்பு
காதலில் ஊடலும் உணர்தலும் களிப்பு
ஊடலின் எல்லை கூடலா(மது)வும் களிப்பு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-16, 10:47 am)
பார்வை : 117

மேலே