காலாவதி ஆகிப்போக

காலாவதி ஆகிப்போக
காதல் ஒன்றும்
கடையில்
விற்கும் பொருள்
அல்ல....!!

காலாகாலத்திற்கும்
உள்ளத்தில்
இருந்து
உனக்கு ஏதோ
ஒன்றைச்
சொல்லும்
உன்னத
உணர்வு.....!!

மழைக்காலங்களில்
மறைந்துபோன
வாசல் கோலங்கள்
அல்ல
வாழ்க்கை.....
நினைத்து நினைத்து
வாழவைக்கும்
ஒரு புள்ளிதானும்
போதும்...வாழ்க்கையை
அனுபவித்து
வாழ்ந்திட.....!!

வேறென்ன சொந்தம்
வேண்டும்
எனக்கு....வேதனை
என்றதும்
வந்துவிடும்
உன் நினைவுகள்
ஒன்றுமட்டும்
போதும்....!!

கோபத்தில் தீ......யை
மூட்டினாலும்
நேசத்தில் நீ.... ரை
ஊற்றினாலும்
நான்.....உன்
காதலில் பற்றி எரிந்து
அணைந்து
போகிறேன்.....!!

எழுதியவர் : thampu (4-Jun-16, 1:10 pm)
பார்வை : 96

மேலே