காதல்

தண்ணி அடித்தது
தம் அடித்தது
வெயில் அடித்தது
எதுவும் வலிக்கவில்லை!
அழைப்பிதழ் கொடுத்துவிட்டு
அவசியம் வந்துவிடு...
அவள்
சொல்லில் அடித்தது!
கல்லில் அடித்த
காயத்தைபோல்
கடைசி வரைக்கும்
வலித்தது!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (4-Jun-16, 1:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே