புரட்சி
புரட்சி ஒன்றும் புதிதல்ல என்
புண்ணிய பூமிக்கு,
வேங்கைக்கு நிகரான, வேந்தர்
கூட்டம் வாளெடுத்து வரலாறு கண்ட வீர மண்ணாம்!
வைகை செழித்தோடியும் ,வனங்கள் உயிர்வாழுமாம்,கோபுரங்கள் அழகோவியமாய் ,பிட்டுக்கு மண் சுமந்த தென் ஈசணாம்!
முண்டாசு கட்டிய என் முப்பாட்டன் அவன் .,வரிகளிளே வாள் எடுத்து போா்களிலே புரட்சி செய்த புரட்சி கவி பிறந்த பூமியாம்
பழம்பெரும் மொழிகளிலே ,கவியூட்டினாலும்
எம்மொழிக்கு ஈடில்லை '
இப்புவியிலே!!!
என் மொழிக்கும் ரௌத்திரம்
உண்டு !!!