கவிதை

மண்ணை
முத்தமிட்டு
அரவணைக்கும்
மழைத்துளி

பூவின்
நறுமணத்தை
களவாடும்
இளந்தென்றல்

சூரியனின்
பார்வையில்
மதிமயங்கும்
கார்மேகம்

பெண்ணின்
ஆழ்மணத்தில்
ஒளிந்திருக்கும்
ஆசை

அநுபவமும்
வார்த்தையும்
இணைந்த
வார்ப்பு

உணர்வும்
உணர்ச்சியும்
சங்கமிக்கும்
படைப்பு

மொழியின்
சிக்கனத்தில்
ஒளிரும்
வைரம்

கற்பனையும்
சொல்லும்
கைகோர்க்கும்
புதுமை

மகிழ்வையும்
அதிர்வையும்
கொடுக்கும்
வரிகள்

தகவல்
ஒளிந்து நிற்கும்
சமுதாயம்
சிறப்பதற்கு.

எழுதியவர் : கோ. கணபதி. (6-Jun-16, 11:37 am)
Tanglish : kavithai
பார்வை : 67

மேலே