காலத்தின் கணக்கு•••
வாழ்க்கையில் போட்ட வேஷங்கள் ஒன்றைக்கூட மறக்க முடியாது
போடப்போகும் வேஷம் அதை மீண்டும் நினைக்கமுடியாது
அதுவே மரணம்
தான் வாழும்போதே
மரணத்தை நினைவில்
கொண்டவன் தவறியும்
தப்பு செய்யமாட்டான்
தான் வாழும்போது
மரணத்தை மறந்துவிட்டு
தவறிழைப்பவனின்
மூச்சை நிறுத்த மரணம் மறந்துவிடுவதில்லை
சுவாரசியம் யாதெனில்
ஒருவருக்கு நரகம்
ஒருவருக்கு மோட்ஷம்
கூட்டி கழித்து பார்க்க
காலத்தின் கணக்கு
சரியாகவே இருக்கும்