அக்னி வெயில்

சுட்டு எரிக்கும் அக்னி வெயில்,
என் மிகப் பழைய மின்விசிறி
வெக்கையைப் போக்க முயல்கிறது...!

வயசாகிப் போனதால் அதுவும்
லொட லொட லொட லொடக்கிறது!
வயசாகிப் போனாலே இப்படிதான்...!

அக்னி வெயில் ஓய்ந்தது,
என் வீட்டு மின்விசிறியும்தான்,
எல்லோர்க்கும் நிம்மதி...!

குளிர்சாதன இயந்திரம்,
வெக்கை தணிக்கிறது; மின்சாரச்
செலவு கட்டுபடியாகவில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-16, 10:26 pm)
Tanglish : akni veyil
பார்வை : 195

மேலே