எனது தெரிவில் சிறப்புக் கவிதை அவள்

இனிய காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகிய கவிதை . காதலிக்கிறோமோ இல்லையோ காதலின் மென்மையை சொல்லில் வெளிப்படுத்தத் தெரிந்தவன் உண்மைக் கவிஞன் . காதல் உணர்வுகளை வெளிபடுத்துவதில் சமர்த்தன் லத்தீன் அமெரிக்க கவிஞன் நெருடா . படிக்கவும்.
மல்லிகையையும் புன்னகையும் வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்த காமிரா காரருக்கும் மானசீகமாக முதுகில் ஒரு சொட்டு
எனது தெரிவில் இன்றைய சிறப்புக் கவிதை . வாழ்த்துக்கள் . உங்கள் முதுகிலும் ஓர் அன்புத் தட்டு
அன்புடன் , கவின் சாரலன்

திருமூர்த்தியின் "அவள் " கவிதையில் நான் தெரிவித்த கருத்து

காட்டு மூங்கிலின்
துளைகள் கடந்து
கவிதை எழுதுவேன்
உன் கற்பனை
எரியும் கனவுகளுக்கு...

செந்தாமரைக் கரம்கொண்டு
யாழ் வாசிக்கும்
தேவதையே...
உன்னைச் சுமந்து செல்லும்
பாக்கியம் உண்டா எனக்கு ?
----இந்த அழகிய ஆரம்ப வரிகளுடன் நடக்கும் கவிதையை நீங்களும்
படித்துப் பாருங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் தெரிவு (18-Jun-16, 9:40 am)
பார்வை : 157

மேலே