சகுனம்

போன காரியம்
தடைப் பட்ட நொடியில்

கவனப் பிசகாக சாலையில் போய்
சாவு கிராக்கி எனத்
திட்டு வாங்கிய சமயத்தில்

தேவையற்ற
தொல்லை உண்டான கணத்தில்

நினைவிற்கு வருகிறது
வீட்டை விட்டு வெளியேறுகையில்
குறுக்கே போன பூனை

எழுதியவர் : பொன். kumar (22-Jun-11, 8:03 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : sakunam
பார்வை : 276

மேலே