தொடுவானம்

நான் சொல்ல விரும்பும் சொல்
சொல்லாத சொல்
தெரிந்தும் பதராசமாய் நீ.

எழுதாத பக்கங்களாக
என் காதல்
தவிக்கின்ற தருணங்கள்,

கரும்பாலையில்
அகப்பட்ட கரும்பாய்.

வெளிவர இயலா
சுவாலை.
தெரிந்தே பயணிக்கிறேன் .
உன்னை அடைய.

எட்டிவிடும் தூரத்தில்
தொடுவானமாக நீ!

என்னை
என்ன செய்தாயோ?
அறியேன்.

நீ இல்லாமல்
வாழ்க்கை பாதை
வறண்ட நிலமும்,
நிசப்த சூழலுமாக .

எழுதியவர் : ரதி ரதி (29-Jun-16, 12:14 pm)
Tanglish : thoduvaanam
பார்வை : 158

மேலே