கடல் வழிக்கால்வாய் - இருட்டு தான் அழகு

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இருட்டு தான் அழகு .......

^^^^^^^^^^^^^^^^^
எல்லோரும் வெளிசத்தை ....
பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ......
காலையில் சூரிய ஒளி அழகு ....
மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு .....
அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு .....
இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!!

ஆலயங்களில் தீப ஒளி அழகு ....
வீடுகளில் குத்து விளக்கு அழகு .....
திரை அரங்கில் வெள்ளி திரை அழகு ....
ஆளுக்காள் போட்டிபோடும் ....
அலங்கார விளக்குகளும் அழகு ...
செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!!

வெளிசத்தில் அழகுதான் அதிகம் .....
இருளில் அழகும் அதிகம் .....
இருளில்தான் அறிவும் உதயம் .....
நாம் பிறக்கமுன் கருவறை இருள் ....
விதை முளைக்கமுன் விதை இருள் .....
கருவறையில் சாமி இடமும் இருள் ....
கல்லறையும் இருள் தான் .....!!!

வெளிசத்தில் தான் வேறுபாடுகள் .....
வெளிசத்தில் பார்க்கும்போதே ....
குட்டை நெட்டை வேறுபாடு .....
அழகு அசிங்கம் வேறுபாடு ....
இத்தனை ஏற்றத்தாழ்வுகள் ....
இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....!
இருளில் மனிதனும் ஒன்றுதான் ....
இருளில்கதிரையும் ஒன்றுதான் ...
பறவையும் மிருகமும் ஒன்றே.....
இருள் என்பதே சமத்துவம் தான் ....!!!

இருள் .........
இருப்பதாலேயே வெளிச்சம் ...
அழகு பெறுகிறது .....
அழகாக இருப்பதை விட ....
அழகாக்குபவையே அழகு ....
ஆதலால் தான் இருள் அழகு ......!!!

&
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Jun-16, 4:35 pm)
பார்வை : 109

மேலே