தமிழ்

தமிழனாய்
தாயின் மடியில் பிறந்தாய்...
தாய்ப் பாலோடு தமிழ்ப் பாலையும்
பருகித்தான் வளர்ந்தாய்......


உனக்கு வைத்தப் பெயரும் தமிழே...
உன்னைக் கொஞ்சிய
அன்னை மொழியும் தமிழே......


நீ பேசிய முதல் வார்த்தை
முத்தானத் தமிழே...
நீ எழுதிய முதல் எழுத்து
மகத்தானத் தமிழே......


நீ படித்துப் பட்டம் பெற்றதும்
நம் மொழி தமிழே...
செம்மொழி தமிழே......


நீ காதலில் விழுந்து
காதலிக்கு கவிதை சமைத்ததும்
கன்னித் தமிழே......


நீ வேலைக்கு செல்வதோ?...
வெளியூர் தான்...
சம்பாதித்து வருவதோ?...
வேற்று மொழியைத் தான்......


வேடிக்கையாய் பார்ப்பது கூட
வேற்று மொழி படந்தான்...
நீ அதிலே மூழ்கி விட்டாய்
அது தான் வருத்தமே......


தமிழிலும் பார்க்கின்றாய் உண்மை தான்...
தமிழை மறந்தே
பார்ப்பதும் உண்மையே தான்......


பெற்ற பிள்ளைக்கு பெயர் வைத்தாய்
புரியாத மொழியிலே...
உனைப் பெற்றவளும் வருந்தினாள்
நீ வைத்தப் பெயரிலே......


உன் வீட்டின் செங்கலை
ஒவ்வொன்றாய் நீயே பிரித்தால்
இடிந்து விழுவது ஏனோ?...
உன் தலையில் தானே......


தமிழனாய் வாழும் உனக்கு
வேற்று மொழி மோகம் எதற்கு...
தமிழிலே வளர்ந்த உனக்கு
புதிதாய் ஏனிந்த கிறுக்கு......


பெற்ற தாயை மறவாதே......
கற்ற தமிழையும் மறவாதே......

எழுதியவர் : இதயம் விஜய் (5-Jul-16, 9:55 pm)
Tanglish : thamizh
பார்வை : 494

மேலே