சொல்லுவியோ
தினம் தினம் பூக்கிறது
ஆயிரம் பூ பூமியிலே.....
நீ வந்து போன பாதையில
குறிஞ்சி பூவும் தினமும் பூக்குதாம்....
குத்த வச்ச அத்தை பொண்ணு
நான் இருக்க ....
மத்த பொண்ண நீ நாடுவதேன்....
மாமன் மகன் உறவுன்னு
சொல்லி சொல்லி
வளர்க்கிறது ஊர் இங்கு .....
அழுகாச்சி படம் போல
எனை அழுகவச்சி பார்க்கத்தான்
உனக்கு மனம் வந்ததே....
உன் நினைப்பு கோடி இருக்கையில
என் நினைப்பு ஒன்னு கூடவா இல்ல...
சின்ன வயசு ஞாபகம்
கோடி கொட்டி கிடக்குது....
பெரிய வயசு ஆனதும்
பேச கூடவா தோனல.....
கோடு போட்டு கோ கோ
விளையாட தெரியாது
உனக்கு ....
பதிலாக
என் வாழ்க்கையோடு
நன்றாக விளையாடுகிறாயே.....
பார்த்து கூட பேசாமல்
போகுறியே....
அழகான மௌனம்
கூட கொள்ளுது என்னை...
ஆதரவா ஒரு சொல் சொன்ன
கோடி ஜென்மம்
வாழ்ந்திட்டு போவேன்...
சொல்லுவியோ.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
