நீ மட்டும் போதும் தோழியாய்

முதல் அறிமுகம்
அதுவரை நீயோ புதுமுகம்
எந்தன் அருகினில் நீ
உனை அறிமுகம் செய்ய...
எனைப்பற்றி ஏற்கனவே அறிந்தே வந்தாய்...
புன்முறுவலுடன் நான்....
தொடர்ந்தது நட்பு...
இதுவரை பார்த்திடாத என்னை
புதிதாய் காட்டினாய்....
உன்னை எனக்கு பிடித்தே போனது...
எனக்காய் எதையும் செய்யும்
குணம்....
என்னையே எதிர்பார்க்கும் தினம்...
உன்னை எனக்கு மிகவும் பிடித்தே போனது..
அன்பாய் சில
பரிசுகள்
கொடுத்ததுண்டு நீ..
எதையும் விட சிறந்தது உன் நட்பே எனக்கு...
என்னிடம் சண்டை பல போட்டதுண்டு
அதற்காய் உண்ணாவிரதம் இருந்ததுண்டு
இப்போது உன்னை மட்டுமே பிடித்து போனது எனக்கு...
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்....
நீ எங்கே இருந்தாலும்
உன் நினைவுகள் என்னிடம் ....
அடுத்த ஜென்மம் ஒன்று
இருந்தால் நீ மட்டும் போதும்
எனக்கு தோழியாய்.....

எழுதியவர் : கிரிஜா.தி (8-Jul-16, 7:02 pm)
பார்வை : 1310

மேலே