இந்தப் பிரபஞ்சம் உன் வசம்

அண்ட சராசரங்களாக விரிந்திருக்கும்
பிரபஞ்சம்
அதில் ஆதவன்
ஒரு அக்கினிப் பிரவாகக் கோளம்
ஆதித்தனை உதயத்தில் காண்
இதயத்தில் வை
இந்தப் பிரபஞ்சம் உன் வசம் !
----கவின் சாரலன்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற்செ யின் --------------------வள்ளுவர்
காலம் கருதி என்ற சொற்றொடரை அடிக்க கோடிட்டுப் படிக்கவும்.
காலம் --காலத்தின் நாயகன் கதிரவன். கதிரவன் இன்றி ஒளி இல்லை . ஒளிச் சுழலும்
இல்லை . உதயமும் அஸ்தமனமும் இல்லை . இரவும் பகலும் இல்லை .
அந்தக் காலத்தின் நாயகனை கருதி --நெஞ்சில் வை --ஞாலம் --இந்தப் பிரபஞ்சத்தை
நீ வேண்டிடினும் கைகூடும் --கைவசமாகும் .
சிலவரிகளில் நாம் சொல்ல நினைப்பதை இரண்டடியில் சொல்லிவிடும்
ஆசானை ஆதரிசனனை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்