துளி
உன் பார்வையில்
உருகிய
பனித்துளி நான் ....
உன் சுவாசத்தில்
கரைந்த
மழைத்துளி நான் ....
உன் தேகத்தில்
உரையும்
வியர்வை துளி நான் ....
உன் காலில்
படரும்
அலையின் நுரைத்துளி நான் ....
உன் நெற்றியில்
நடுவில்
சாந்துத் துளி நான் ...
என் வாழ்வை
கரைக்கும்
கண்ணீர் துளி நீயா!