ஓர் புதிய பயணம் வேண்டும்

எங்கேனும் செல்ல வேண்டும், தொலைதூரம்...
யாதும் அறியாது, யாவரையும் அறியாத ஓர் இடத்திற்கு
புதிய முகங்களை படித்துகொள்ளவும், பட்டறியவும் ஓர் புதிய பயணம் வேண்டும்
இதற்கென்று அறியாது செல்லவேண்டும்...
மரிக்கச் செய்த தனிமையின் துணைகொண்டு ஓர் பயணம்...
கலைத்து நிற்கையில், சாய்ந்திட தோள் இன்றி...
திரும்பி பார்கையில், பின் எங்கும் காட்சிகள் இன்றி...
உடல் நீர்யாவும் உவர்பாய் வெளிகொணர ஓர் பயணம் வேண்டும்...
சுவடுகள் யாவையும் என் நிழல்கள் அழித்திடவும்,
நிணைவுகள் யாவும் வீழ்ந்திடவும், என்னுயிர் யாவும் தவித்தடவும்,
எட்டு வைத்திட இயலாத தூரம்வரை ஓர் பயணம் வேண்டும்
தனிமையில்...

எழுதியவர் : தமிழ் நேசகன் (14-Jul-16, 11:53 pm)
பார்வை : 122

மேலே