ஒரு நாளுக்காக

அவன் பிறந்தபோது
அழுததற்காக,
அன்று ஒருநாள் மட்டும்
சிரித்த அன்னையை,
ஆயுள் முழுதும்
அழவைத்துவிட்டானே-
அன்பு இல்லத்துக்கு
அவளை அனுப்பி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jul-16, 6:24 pm)
Tanglish : oru naalukaaka
பார்வை : 233

மேலே