குழந்தை வரம்

பெற்றவள் பத்து மாதம் மட்டுமே உன்னை சுமந்தாள் -ஆனால்
நானோ மணமான நாளிலிருந்து சுமக்கிறேன்
உன்னை இறக்கிவைக்க மனமில்லாமல் இல்லை-உன்
உதயத்தை உணர முடியாமல் நித்தம் என் வயிற்றில்
கை வைத்து பார்க்கிறேன் -உன்
உந்துதல் உணர மாட்டேனா என்று
உன்னை பெறாமல் இந்த மண்ணை விட்டு-நான்
சென்றாலும் என் கல்லறை கூட
எனக்கு சுமையாகத்தான் தெரியும்

எழுதியவர் : prabavathi (16-Jul-16, 4:32 pm)
Tanglish : kuzhanthai varam
பார்வை : 1341

மேலே